சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனங்களிலும் குதூகலத்தை ஏற்படுத்தும் ஓர் அருள் பண்டிகை நவராத்திரி! ஓர் ஆண்டில் தொடர்ந்து 9 நாள்கள் அம்பிகைக்கு நாடெங்கிலும் பரவலாக வழிபாடு நடத்தும் ஓர் உன்னதப் பண்டிகை இது.
தலைநகரப் பகுதிகளான மயூர் விஹார், லோதி ரோடு, திரிலோக்புரி, தில்ஷாத் கார்டன், நொய்டா, குர்கான், கேசவபுரம், ரோஹிணி, தசரதபுரி, ஜனக்புரி, துவாரகா, மங்கோல்புரி, கரோல் பாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில், அரசு- தனியார் அலுவலகங்களில் இப் பண்டிகையை ஒட்டி சிறப்பு அலங்கார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தில்லியில் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்கள் வீடுகளில் பொம்மைக் கொலு அமைத்துள்ளனர். தலைநகர் பகுதியையடுத்த குர்கான், நொய்டா ஆகிய நகரங்களில் வாழும்
தமிழர்களின் வீடுகள் பலவற்றிலும் பொம்மைக் கொலு வைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி வேளைகளில் பழமை மாறாமல் பஜனையையும் சிலரது வீடுகளில் நடத்தி வருகின்றனர். பெண்கள் அம்பாளின் பாடல்களையும், நாமாவளியையும் பாட, சிறுவர்களும் உடன் சேர்ந்து பாடுவது பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
தேசியத் தலைநகர் பிராந்தியமான நொய்டா கேந்திரிய விஹார் செக்டர் 51-ல் வசிக்கும் அம்பிகா ஸ்ரீகாந்த் பல ஆண்டுகளாகத் தனது வீட்டில் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடி வருவதாகக் கூறுகிறார்.
""நவராத்திரி விழாக் காலங்களில் எனது மாமியார் வீட்டில் கொலுப் பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். அவரைப் பின்பற்றி, இப்போது நானும் பல ஆண்டுகளாக நவராத்திரியின்போது பொம்மைக் கொலு வைக்கிறேன். மாலை வேளைகளில் வீடுகளில் லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் செய்து வருகிறோம். இதில் பெண்கள் பலரும் ஒன்றுகூடி வழிபடும்போது தமிழகத்தில் இருந்தால் எப்படி ஓர் உணர்வு கிட்டுமோ அதே போன்ற உணர்வைப் பெறுகிறோம்'' என்றார்.
நொய்டாவில் செக்டர் 34-ல் வசிக்கும் நாகலட்சுமி கூறியது:
""நாங்கள் தலைமுறை, தலைமுறையாக வீட்டில் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடி வருகிறோம். இது ஒரு ஆன்மிக விழா மட்டுமல்ல; மனித உறவை வலுப்படுத்தும் விழா. எங்கள் வீட்டில் கீதோபதேசம், ராமன், சீதை, அம்பாள் சிலைகள், ராதா- கிருஷ்ணர் சிலைகள், வெளிநாட்டினரின் விதவிதமான உணவு வகை பொம்மைகள், விவசாயக் கருவி பொம்மைகள் ஆகியவற்றை வைத்துள்ளோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

