புது தில்லி, ஜூலை 18: தமிழர்கள், மலையாளிகள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் அதிகம் வசிக்கும் தில்ஷாத் கார்டன் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகருக்கு என தனி ஆலயம் இல்லாத குறை இருந்துள்ளது.
இப் பகுதியைச் சேர்ந்த ஆர்.வி. கணபதிராமன், ஆர். தங்கராஜ் ஆகிய தமிழர்களுக்கு விநாயகர் கோயில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் உதித்துள்ளது. தென்னிந்திய மக்களுக்கு விபூதி, குங்குமப் பிரசாதம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் எழுந்தது. இதையடுத்து, 1989-ம் ஆண்டில் அதற்கான முயற்சிகளில் இருவரும் ஈடுபட்டனர்.
தொடக்கத்தில், ஜி.டி.பி. என்கிளேவ் குடியிருப்பில் இருந்த ஆர்.வி. கணபதிராமன் வீட்டு வளாகத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந் நிலையில் அறிமுகமில்லாத நபர் ஒருவர், தாஹிர்புரில் கோயில் அமைக்க இடம் இருப்பதாகக் கூறி அதற்கான "புளு பிரிண்ட்' பிரதியை இருவரிடம் அளித்துள்ளார் என்றால் அது இறை விருப்பம் அல்லாமல் வேறென்ன!
கோயில் அமைப்பது குறித்து காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசிர்வாதம் கேட்கப்பட்டது. அவரும் ஆசிர்வதிக்கவே, திருநெல்வேலியில் ஸ்ரீகணேசர் மந்திர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு உறுப்பினர்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.176-ம் வசூலிக்கப்பட்டது.
முறைப்படி கோயிலுக்கு 400 சதுர மீட்டர் இடம் கேட்டு டி.டி.ஏ.விடம் 1991-ல் மனு செய்யப்பட்டதுடன், கோயில் சங்கமும் அதே ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.
1998-ம் ஆண்டில் நிலம் கிடைத்ததும் அங்கு 11.7.99-ல் விநாயகர் சிலையை வைத்து பாலாலயம் நடத்தினர்.
அதன்பிறகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர், நவக்கிரகம், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டன.
நவக்கிரக சிலைகள், ஸ்ரீ முருகன், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலைகள் சென்னை மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன. திருப்பணி வேலைகள் ரூ.25 லட்சத்தில் மேற்கொள்ளப்பட தரைத்தளத்துடன்கூடிய மூன்று தளங்களுடன் கோயில் பணி தொடங்கப்பட்டது.
கோயிலின் கீழ்த்தளத்தில் சமய நிகழ்ச்சிகள் நடத்தடவும், முதல் தளத்தில் மூலவர், பரிவார தெய்வங்களின் சன்னதிகள் அமையும் வகையிலும் திருப்பணி நடைபெற்றது. இப்பணிக்கு பக்தர்களும், பிற மதத்தினரும் நன்கொடை அளித்து உதவினர்'' என்று கோயில் கமிட்டியினர் மனம் பூரிக்கின்றனர்.
ஏப்ரல், 2008-ம் ஆண்டில் ஆர்.கே.புரம் மலைமந்திர் சிவாச்சாரியார் வைத்தியநாதன் தலைமையில் இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பிறகு கடந்த ஆண்டு ராஜகோபுரப் பணி ரூ.35 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு, 6 மாதங்களில் முடிக்கப்பட்டது. இப்பணியை பூம்புகார் வினோத்குமார் ஸ்தபதி மேற்கொண்டார். இதன் கும்பாபிஷேகம் 22.8.2010-ல் நடைபெற்றது.
இவ்விழாவில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தொகுதி எம்எல்ஏ திகான் சிங் கலந்துகொண்டனர்.
வடக்கு நோக்கிய ராஜகோபுரமும், மேற்கு நோக்கிய மூலவர் சன்னதியும், கிழக்கு திசையில் அகஸ்தீஸ்வரர், ஸ்ரீ சுப்பிரமணியர், துர்க்கை, ஆஞ்சநேயர் சன்னதிகளும் கொண்டதாக இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தில் 150 சுதைகள் வடிக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் மூன்று கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி, சிவராத்திரி, பிரதோஷ பூஜை, சஷ்டி விழா, பௌர்ணமி நாளில் சத்தியநாராயண பூஜை நடத்தப்படுகின்றன.
நவராத்திரியின்போது 9 நாள்களிலும் தனி மேடை அமைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. மும்பையில் நடைபெறுவது போன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் சிலையை அமர்த்தி வைத்து தில்ஷாத் கார்டன், சீமாபுரி, ஜிடிபி என்கிளேவ் உள்ளிட்ட பகுதிகள் வழியாக 3 கி.மீட்டர் தூரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
இந்த விழாவில் தில்ஷாத் கார்டன் பகுதி தவிர பிற பகுதியைச் சேர்ந்த தென்னிந்திய, வட இந்திய மக்களும் கலந்துகொள்வர்.
""சனிக்கிழமைகளில் வட இந்தியர்கள் நவக்கிரக பூஜையில் கலந்துகொண்டு விளக்கிட்டு பிரார்த்திக்கின்றனர். கோயில் பணிகளுக்கு அவர்களது உதவியும் போற்றத்தக்கது.
இக்கோயிலில் 9.4.2000 முதல் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை உச்சிகால பூஜைக்குப் பிறகு அன்னதானம் நடைபெறுகிறது. 300-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு அளிக்கிறோம்'' என்று கோயில் கமிட்டித் தலைவர் சி.சுப்பிரமணியம், இணைச் செயலர் ஜெ.பாஸ்கரன் ஆகியோர் தெரிவித்தனர்.
""இப்போதைய விநாயகர் கோயில் அருகிலேயே அரசு இடம் உள்ளது. அந்த இடம் கிடைத்தால் வேத பாடசாலை ஆரம்பிக்க உள்ளோம். அதேபோன்று, தென்னிந்தியக் கலாசாரத்தை வளர்க்கும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளையும், பயிற்சி வகுப்புகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
பள்ளித் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்குச் செல்லும் மாணவர்களின் நன்மைக்காக ஆண்டுதோறும் வித்யார்த்தி ஹோமம் நடத்தி வருகிறோம். இதில், சுமார் 250 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
கோயிலில் நடைபெறும் பூஜை விவரங்கள், நிகழ்ச்சிகள் குறித்து பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஓர் இணையதளத்தையும் உருவாக்கி வருகிறோம்.
இப்போது ள்ழ்ண்ஸ்ஹழ்ஹக்ட்ஹஞ்ஹய்ங்ள்ஹழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல்களை பக்தர்களுக்கு அளித்து வருகிறோம்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

