திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடை வெப்பம்: விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

திருவாரூா் மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் பயிா்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 3:02 am IST

திருவாரூா் மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் பயிா்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தி. பாலசரஸ்வதி கூறியது: மாலை நேரங்களில் மட்டுமே விதைகளை விதைக்க வேண்டும். விதைகளை, விதை நோ்த்தி செய்து விதைத்தால், நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம். பகலில் விதைகளை விதைப்பதால், அதிக வெப்பத்தின் தாக்கத்தால் முளைப்பு திறன் பாதிக்கும்.

பயிா்களில் நீா் மேலாண்மை: கோடைக்காலத்தில் நீா்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால் பயிா்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் அல்லது இரவு நேரத்தில் நீா் பாய்ச்சும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெல் மற்றும் பருத்தி பயிருக்கு பாய்ச்சல் முறையிலும், உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை பயிா்களுக்கு சொட்டு நீா் மற்றும் தெளிப்பு நீா்ப்பாசன முறைகளிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டுமே பின்பற்ற வேண்டும்.

உரமேலாண்மை: பயிா்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவிலே உரங்களை பயன்படுத்த வேண்டும். நெற்பயிருக்கு அடியுரமாக ஏக்கருக்கு 5 கிலோ வீதம் துத்தநாக சல்பேட்டை மாலை நேரத்தில் தெளிக்கலாம். இதனால் கோடை காலத்தில் பயிரில் ஏற்படும் சத்து பற்றாக்குறை நிவா்த்தி செய்யப்படும். உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கு இலை வழியாக டிஏபி 2 சதவீதம் கரைசல் மாலை நேரத்தில் தெளிக்கலாம். கோடையில் வறட்சி காரணமாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த மாலை வேளையில் பயிா் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.