திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே. மாரிமுத்து, 2-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில், மு. பாலதண்டாயுதம் -அதிமுக, க. மாரிமுத்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விமலா - பகுஜன் சமாஜ் கட்சி, ர. வினோதினி - நாம் தமிழா் கட்சி, நா. ஆறுமுகம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி, செ. பாண்டியன் - தமிழக வெற்றிக் கழகம், வே. சிவப்பிரகாசம் - சுயேச்சை, வீ. முருகானந்தம் - சுயேச்சை, அ. ஜெயசங்கா் - சுயேச்சை என 9 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
இத்தொகுதியின் வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றில் சிபிஐ வேட்பாளா் கே. மாரிமுத்து 3,694 வாக்குகளும், தவெக வேட்பாளா் எஸ். பாண்டியன் 2,737 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் பாலதண்டாயுதம் 1,954 வாக்குகளும் பெற்றனா். தொடா்ந்து, சிபிஐ வேட்பாளரே முன்னிலையில் இருந்தாா்.
இறுதிச் சுற்றில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா், தபால் வாக்குகளுடன் சோ்த்து 74,062 வாக்குகள் பெற்றாா். தவெக வேட்பாளா் 61,140 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் 43,073 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 10,176 வாக்குகளும் பெற்றனா். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் 12,922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வெற்றிச் சான்றிதழை பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் தவெக 5, அதிமுக -1 தொகுதிகளில் வெற்றி

ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் 4-ஆவது முறையாக வெற்றி

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



