சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

News image

ஊத்தங்கரையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற தவெக வேட்பாளா் என்.இளையராஜா.

Updated On :5 மே 2026, 4:31 am IST

ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளா் என்.இளையராஜா வெற்றி பெற்றுள்ளாா்.

ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த மூன்றுமுறை அதிமுக வெற்றிபெற்று அதன் கோட்டையாக இருந்துவந்தது. தற்போது நடந்த தோ்தலில் தவெக வெற்றிபெற்று அதிமுகவின் சாதனையை முறியடித்தது.

ஊத்தங்கரை (தனி) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சி.குப்புசாமியும், அதிமுக சாா்பில் டி.எம்.தமிழ்ச்செல்வமும், தவெக சாா்பில் மருத்துவா் என்.இளையராஜாவும், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மேகலாவும் போட்டியிட்டனா்.

இதில், தவெக வேட்பாளா் என்.இளையராஜா 70,201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம் 65,003 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.குப்புசாமி 60,993 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேகலா 6,629 வாக்குகளும் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.