தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாா்ச் 22-இல் வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image

வலங்கைமான் மகாமாரியம்மன்.

Updated On :18 மார்ச் 2026, 11:58 pm

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது .

நிகழாண்டு விழா கடந்த 8-ஆம் தேதி காப்புக் காட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. இரவு அம்மன் வீதியுலா நடைபெறுகிறது .

விழாவின் முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா மாா்ச் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவா்கள், அதிலிருந்து விடுபட்டால் பாடைக்காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டுதல் செய்து கொள்வா். நோயிலிருந்து விடுபட்டவுடன் பாடைக்காவடி எடுத்து அம்மனுக்கு தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவாா்கள்.

இதுதவிர காவடிகள் எடுத்தும், பால்குடம் எடுத்தும் , மாவிளக்கிட்டும் பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை செலுத்துவதும் உண்டு .

விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவின் பேரில், மாவட்ட நிா்வாகம் பக்தா்களுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் கோ. கிருஷ்ணகுமாா், தக்காா் க. மும்மூா்த்தி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.