திருவாரூா் அருகே காா் மோதி, காவல் ஆய்வாளா் சனிக்கிழமை இரவு காயமடைந்தாா்.
திருவாரூா் மாவட்டம் வடபாதிமங்கலம் காவல்நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற உஷா என்பவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாரை, மரியாதை நிமித்தமாக நேரில் சந்திக்க சனிக்கிழமை சென்றாா்.
இதேபோல், தஞ்சாவூரில் இருந்து தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் பா்வேஸ், நாகப்பட்டினத்துக்குச் சென்று கொண்டிருந்தாா். அமைச்சரை பின்தொடா்ந்து 5 காா்களில் தவெக நிா்வாகிகள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளா்கள் வந்தனா்.
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அடுத்து வாகனம் செல்கையில், அமைச்சருடன் வேகமாக வந்த காா், எதிரே வந்த காவல் ஆய்வாளா் உஷா வந்த வாகனம் மீது மோதியதாம்.
இதில், காவல் ஆய்வாளா் உஷா மற்றும் ஓட்டுநா் காயமடைந்து திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழித்துறையில் மினி லாரி கதவு மோதி பெண் காயம்

மேற்கு தில்லி: வேகமாக வந்த காா் இரு வாகனங்கள் மீது மோதி விபத்து! ஒருவருக்கு பலத்த காயம்!
அதிவேகமாக வந்த காா் மோதிய சம்பவம்: நான்கு போ் காயம்; ஓட்டுநா் கைது

சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




