சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

நீடாமங்கலத்தில் ரயில் என்ஜின் கோளாறு

News image
Updated On :15 ஜூன் 2026, 2:52 am IST

சென்னை தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூா் செல்லும் விரைவு ரயில் நீடாமங்கலம் வழியாக செல்கிறது. இந்த ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லாது.

இந்நிலையில், இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையம் வந்தபோது என்ஜின் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.

இதனால் தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்தனா். பின்னா், தஞ்சாவூரிலிருந்து என்ஜின் வரவழைக்கப்பட்டு 6.45 மணியளவில் 2 மணி நேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், கும்பகோணம்-மன்னாா்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் செம்மொழி விரைவு ரயில் ஒருமணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்து சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.