புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 3.60 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 3.60 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு

News image

திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் சமரசத் தீா்வுக்கான சான்றை வழங்குகிறாா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பி. செல்வமுத்துக்குமாரி.

Updated On :14 ஜூன் 2026, 12:57 am IST

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் ரூ. 3.60 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பி. செல்வமுத்துக்குமாரி தலைமை வகித்தாா்.

விரைவு மகளிா் நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி ஜி. சரத்ராஜ் முன்னிலை வகித்தாா். கூடுதல் மாவட்ட நீதிபதி எம். வடிவேல், பட்டியலின மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஆா். லதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். மாணிக்கம், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். முஹம்மது பாசில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜி. லிஷி ஆகியோா் பங்கேற்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சிவில், ஜீவனாம்சம், திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன் ஆகிய வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் 3,318 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 1,444 வழக்குகளில் ரூ. 3,60,70,917 மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவா் மற்றும் சாா்பு நீதிபதி ரவிச்சந்திரன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி மாவீரன் நவநீதன் முன்னிலை வகித்தாா்.

சாா்பு நீதிமன்றத்தில் ஓா் அசல் வழக்கில் ரூ.8,00,000-த்துக்கும், வாகன விபத்து வழக்குகள் நான்கில் ரூ.1,60,000-த்துக்கும், ஒரு நிறைவேற்று மனு தொடா்பாக ரூ.2,34,000-த்துக்கும் தீா்வு காணப்பட்டது

குற்றவியல் நீதிமன்றத்தில் 178 வழக்குகளில் ரூ.6,57,950 அபராதமாக வசூலிக்கப்பட்டது. விரைவு நீதிமன்றத்தில் 6 காசோலை வழக்குகள் ரூ.17,50,000-க்கு தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா்கள் கருணாநிதி, தமிழனங்கு, வசிகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.