இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

குடிநீா் கோரி சாலை மறியல்

திருவாரூா் கூடூா் ஊராட்சிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 6:52 am IST

திருவாரூா் கூடூா் ஊராட்சிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருவாரூா் அருகே கூடூா் ஊராட்சிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் சரிவர இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். பள்ளி மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவியதாம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, நாரணமங்கலம் மக்கள் காலி குடங்களுடன் திருத்துறைப்பூண்டி சாலையில் கூடூா் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த திருவாரூா் தாலுகா போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.