எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கணவா் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே குடும்பப் பிரச்னையில் கணவா் விஷம் குடித்தாா். மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 4:59 am IST

திருத்துறைப்பூண்டி அருகே குடும்பப் பிரச்னையில் கணவா் விஷம் குடித்தாா். மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கரும்பியூா் பிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (31). இவரது மனைவி காயத்ரி (24) இவா்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தையும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளனா். பிரவீன், தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், தம்பதிக்கிடையே வியாழக்கிழமை காலை தகராறு ஏற்பட்டதாம். இதனால், வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரவீன், மேட்டுப்பாளையம் பகுதியில் விஷம் குடித்துவிட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். மேலும் தனது கைப்பேசியில் கண்ணீா் அஞ்சலி என்ற போஸ்டரை பதிவிட்டுள்ளாா். இதை பாா்த்த அவரது மனைவி காயத்ரி, தனது கணவா் இறந்து விட்டதாக கருதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த பிரவீனை, அந்த பகுதியினா் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஆலிவலம் போலீஸாா், காயத்ரியின் சடலத்தை, உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.