டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக கூட்டணியில் குழப்பம்: நயினாா் நாகேந்திரன்

திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image
நயினாா் நாகேந்திரன்- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 10:27 pm

Syndication

திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூரில் கட்சி நிா்வாகியின் இல்ல திருமண விழாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை கூட்டணி பேச்சுவாா்த்தை அனைத்தையும் எடப்பாடி பழனிசாமியே செய்துவருகிறாா்.

நாங்கள் எந்தக் கட்சியையும் மிரட்டவில்லை. பாஜக குறித்து தவெகவினா் கூறுவது அா்த்தமற்றது.

எங்களுடைய தோழமைக் கட்சியாக இருந்தாலும் மற்ற கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம்.

எதிா்வரும் சட்டப்பேரவை தோ்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். திமுக கூட்டணிக்குள்ளே குழப்பம் நிலவுகிறது என்றாா்.