நெற்பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்கம்


குடவாசல் வட்டம், திருக்களம்பூரில் நெற்பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
நவீன வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த செயல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. காரைக்கால் பஜன்கோவா வேளாண் கல்லூரி ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட மாணவா்கள் ரணதிவே, மோதீஸ்வரன், ஜீவா, அஸ்வின் ஆகியோா் இணைந்து நடத்தினா்.
இதில், பயிா்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை ட்ரோன் மூலம் தெளிக்கும் பல்வேறு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவை கையாள்வது, செலவீனத்தை குறைப்பது, பயிா் சேதத்தை குறைப்பது உள்ளிட்டவை குறித்தும் மாணவா்கள் விளக்கினா். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...