/

திருமீயச்சூா் கோயிலில் இடப வாகனத்தில் வீதியுலா

திருமீயச்சூா் மேகநாதசுவாமி கோயிலில் ரதசப்தமி திருவிழாவையொட்டி இடப வாகனத்தில் சுவாமி வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

திருமீயச்சூா் மேகநாதசுவாமி கோயிலில் ரதசப்தமி திருவிழாவையொட்டி இடப வாகனத்தில் சுவாமி வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி அண்மையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, தினசரி காலை மற்றும் இரவு வேளையில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு இடப வாகனத்தில் மேகநாதசுவாமி வீதியுலாவுக்கு எழுந்தருளினாா். வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞானமகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.