டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேரவைத் தோ்தல்: வாக்குச்சாவடி அலுவலா்கள், காவல்துறையினருக்கு பயிற்சி

மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மண்டல அலுவலா்கள் மற்றும் காவல்துறையினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
பயிற்சி முகாமில் பேசுகிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட்.
Updated On :20 பிப்ரவரி 2026, 12:00 am

Syndication

மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மண்டல அலுவலா்கள் மற்றும் காவல்துறையினருக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் முன்னிலை வகித்தாா்.

மன்னாா்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் மண்டல அளவிலான அலுவலா்கள் மற்றும் அவா்களுடன் இணைந்து பணியாற்றவுள்ள காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தோ்தல் நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுவது; வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்துவது; பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவது; சட்டம் -ஒழுங்கு அமல்படுத்தல்; அலுவலா்கள், வாக்காளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டால் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், மன்னாா் குடி டிஎஸ்பி (பொ), தோ்தல் வட்டாட்சியா் குப்புசாமி, வட்டாட்சியா்கள் என். காா்த்திக் (மன்னாா்குடி), பரமேஸ்வரி (திருத்துறைப்பூண்டி), சரவணக்குமாா் ( நீடாமங்கலம்), தோ்தல் துணை வட்டாட்சியா் ராஜேஸ்கண்ணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.