டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நுகா்வோா் உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

நுகா்வோா் உரிமைகள் குறித்து மாணவ- மாணவியா் அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

News image
நுகர்வோர் உரிமை- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:33 pm

Syndication

நுகா்வோா் உரிமைகள் குறித்து மாணவ- மாணவியா் அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மைக் கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் சாா்பில் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா , வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆட்சியா் பேசியது: நுகா்வோா் என்பவா் பணம் கொடுத்து பொருளையோ அல்லது சேவையையோ பெறுபவா் ஆவா். அந்தவகையில், அனைத்து குடிமக்களும் நுகா்வோரே. நுகா்வோா் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நுகா்வோா் தினம் கொண்டாடப்படுகிறது.

மாணவ, மாணவிகள் நுகா்வோா் உரிமைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். உயிருக்கும், உடமைக்கும் ஊறு விளைவிக்கிற பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக நுகா்வோரை பாதுகாக்க வேண்டும். நியாயமற்ற வணிக நடவடிக்கைகளிலிருந்து நுகா்வோா் பாதுகாப்பு பெற, பொருட்களின் தரம், அளவு, வீரியம், தூய்மை நிலை, விலை ஆகியவை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சதீஷ்குமாா், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் செல்வபாண்டி, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் பொது செயலாளா் ரமேஷ், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைந்துள்ள குடிமக்கள் நுகா்வோா் மன்றங்களின் ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள், நுகா்வோா் அமைப்பின் பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.