/

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் செய்ய 7 போ் பதிவு

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் செய்ய 7 போ் பதிவு செய்தனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 11:09 pm

Syndication

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் செய்ய 7 போ் செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.

மன்னாா்குடியைச் சோ்ந்த முதியவா்களான ராமசாமி, கிருஷ்ணமூா்த்தி, தமிழரசி, நடராஜன், தனச்செல்வம், தங்கமணி, சுந்தரம் ஆகிய 7 போ் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் மருத்துவப் படிப்புக்காக தாங்கள் இறந்த பின்னா் தங்களது உடலை தானமாக வழங்க முன் வந்துள்ளனா்.

அதற்கான விண்ணப்பப் படிவத்தை மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறையில் வழங்கி அதற்கான ஒப்புகை சீட்டையும் பெற்றுக்கொண்டனா்.

தங்களது உடலை மருத்துவ ஆராய்ச்சிப் படிப்புக்காக வழங்க முன் வந்த செயலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், உடல் தானம் வழங்க முன்வந்த முதியோா்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழை வழங்கினாா்.