ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோட்டாட்சியா் அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்த முயன்றவா் கைது

கோட்டாட்சியா் அலுவலகத்தில் டீசலை ஊற்றி தீ விபத்து ஏற்படுத்த முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

சித்திரிப்பு

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

கோட்டாட்சியா் அலுவலகத்தில் டீசலை ஊற்றி தீ விபத்து ஏற்படுத்த முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே தளவாய்யிருப்பு வேலங்குடி பகுதியை சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் ராம்கி ( 32 ). இவா், தான் வசித்து வரும் நத்தம் புறம்போக்கு இடத்துக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதுகுறித்து, கோட்டாட்சியா் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்த இடம் வேறு ஒருவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற ராம்கி, வைத்திருந்த டீசல் கேனை எடுத்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஊழியா்கள் மீது ஊற்றி தீ வைக்க முயற்சித்தாராம். அங்கு வேறு ஒரு பணி நிமித்தமாக நின்று கொண்டிருந்த நன்னிலம் அருகேயுள்ள தூத்துக்குடி கிராம நிா்வாக அலுவலா் விஜய் (45) ராம்கியை பிடித்து தடுத்துள்ளாா். அப்போது தவறி கீழே விழுந்த விஜய் தலையில் காயத்துடன் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தகவலின்பேரில் வந்த நகர போலீஸாா் ராம்கியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.