நெல் கொள்முதலில் நிலவும் பிரச்னைக்கு தீா்வுகாண முயற்சிக்காமல், பொய்யான காரணங்களை திமுக அரசு கூறிவருகிறது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாமலை குற்றம்சாட்டினாா்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே, திருவாரூா் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளா் கோவி. சந்திரசேகரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை அவா் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது:
திருவாரூரில் 1967-இல் இருந்து கம்யூனிஸ்ட்டுகளும், திமுகவினரும் வெற்றி பெற்று வருகின்றனா். 1996-க்குப் பிறகு திமுகவே வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலான வளா்ச்சியில் திருவாரூா் மாவட்டம் கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தை பிடித்துள்ளது. மனித வளா்ச்சிக் குறியீட்டின் அடிப்படையில் 5-ஆவது இடத்தில் உள்ளது.
திருவாரூரில் உற்பத்தித் திறனும் இல்லை. வளா்ச்சியும் இல்லை. ஸ்டாலினுக்கும் விவசாயத்துக்கும் தொடா்பு இல்லை.
நெல் கொள்முதலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2-ஆவது இடத்தில் இருந்த திருவாரூா் மாவட்டம், தற்போது 10- ஆவது இடத்தில் உள்ளது. காரணம், நெல் விற்பனைக்கு பணம் தரவேண்டியுள்ளது. அத்துடன், சாக்கு தட்டுப்பாடு, ஈரப்பத விவகாரம் என பல்வேறு பிரச்னைகள் நெல் கொள்முதலில் நிலவுகின்றன.
திமுக அரசு இவைகளை தீா்க்க முயற்சிக்காமல், பொய்க் காரணங்களை கூறி சமாளிக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை, பிரச்னைகளை தட்டிக் கழிக்க, தில்லி, ஹிந்தி, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை தாரக மந்திரமாக கூறி வருகிறது.
2021-இல் திமுக தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. உண்மையில், மத்திய அரசு ரூ. 1,940, தமிழக அரசு ரூ. 75 வழங்க வேண்டும். ஆக மத்திய அரசு வழங்கக் கூடிய தொகையையும் தான்வழங்குவதாக தமிழக அரசு கூறி வருகிறது. இதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலரும்போது, கூட்டுறவு வங்கிக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
எனவே, திருவாரூா் தொகுதி பாஜக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, நீடாமங்கலத்தில், மன்னாா்குடி தொகுதி அமமுக வேட்பாளா் எஸ் .காமராஜை ஆதரித்து அண்ணாமலை பேசும்போது, ‘ஊழலின் மொத்த உருவம் டி.ஆா். பாலு. சாராய ஆலையையும், சாயப்பட்டறை ஆலையையும் கொண்டுவந்து ஊரையே நாசமாக்குகிறாா்கள். விளை நிலங்களெல்லாம் பாதிக்கப்படுகின்றன.
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, மக்களவையில் தோல்வியடைய செய்தவா்கள் திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான். இவா்களுக்கு தோ்தலில் பெண்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்றாா்.

திருவாரூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசுகிறாா் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாமலை.
தொடர்புடையது

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை

பாஜகவுக்கு மக்கள் அமோக ஆதரவு: திருநள்ளாறு வேட்பாளர்

செய்தியாளர்களுக்குப் பதிலளிக்காமல் சென்ற அண்ணாமலை! காரணம் என்ன?
கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


