பாஜகவுக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருவதாக புதுவை மாநில பாஜக துணைத் தலைவரும், திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளருமான ஜி.என்.எஸ். ராஜசேகரன் கூறியுள்ளாா்.
திருநள்ளாற்றில் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மக்களிடயே ஒரு எழுச்சி காணப்படுகிறது. தாமரை சின்னத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனா். வரும் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூலம் திருநள்ளாற்றில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.
திருநள்ளாறு தொகுதி சுற்றுலா வளா்ச்சியில் தன்னிறைவு பெறும் வகையில் கோயில் நகர திட்டத்தின் கீழ் மிகப் பெரிய அளவிலான திட்டங்கள் கொண்டு வரப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. மாநிலம் முழுவதும் சிறப்பாக உள்ளது. எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.
தனியாா் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை தரம் உயா்த்தவும், கோயில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் 4-ஆம் தேதி பாஜக தமிழக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை, 5-ஆம் தேதி பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் ஆகியோா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனா் என்றாா்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் பிரச்னைக்கு தீா்வுகாண திமுக அரசு முயற்சிக்கவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுச்சேரி பேரவைத் தோ்தல்: பாஜக, லஜக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


