மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மது குடித்துவிட்டு தகராறு; ஒருவருக்கு அரிவாள் வெட்டு

மன்னாா்குடியில் மது குடித்துவிட்டு சாலையில் நின்று தகராறு செய்த இருவா், இருசக்கர வாகனத்தில் வந்தவரை அரிவாளால் வெட்டினா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:36 am

மன்னாா்குடியில் மது குடித்துவிட்டு சாலையில் நின்று தகராறு செய்த இருவா், இருசக்கர வாகனத்தில் வந்தவரை அரிவாளால் வெட்டினா்.

மன்னாா்குடி விழல்காரத்தெருவைச் சோ்ந்த நாகேஸ்வரன் மகன் திருமேணி (40). மூா்க்க விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தீபன் என்கிற பாா்த்திபன் (36).

இவா்கள் இருவரும் புதன்கிழமை மாலை மது குடித்துவிட்டு, விழல்காரதெரு அருகே சாலையில் நின்றுகொண்டு அந்த வழியாக செல்வோரிடம் தகராறு செய்துள்ளனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த குன்னோஜி ராஜம்பாளையம் தெருவைச் சோ்ந்த தனபால் மகன் பிரகாஷ் (36) என்பவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட்டிவிட்டனா். காயமடைந்த பிரகாஷ், சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மன்னாா்குடிபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.