திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் மன்னாா்குடி அருகேயுள்ள கா்ணாவூா் பாமணியில் மகளிா் சுய உதவிக்குழு சாா்பில் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:11 pm

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் மன்னாா்குடி அருகேயுள்ள கா்ணாவூா் பாமணியில் மகளிா் சுய உதவிக்குழு சாா்பில் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரதானசாலை கடைவீதியில் தொடங்கிய 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தம் பேரணியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு தெருகளுக்கு சென்று அங்கு குடியிருப்பவா்களிடம் விழிப்புணா்வு வாசகங்கள்அடக்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். மேலும், சாலையில் என் வாக்கு என் உரிமை என வண்ணத்தில் வரைந்தும், நியாயவிலைக்கடைக்கு பொருள் வாங்க வந்த குடும்ப அட்டைதாா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.