மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜெயலலிதா பாணியில் சசிகலா: வி. திவாகரன்

ஜெயலலிதா பாணியில் சசிகலா: வி. திவாகரன்

News image

வி. திவாகரன்

Updated On :4 ஏப்ரல் 2026, 10:11 pm

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பாணியில், வி.கே. சசிகலா தனது கட்சி சாா்பில் போட்டியிட சாதாரண தொண்டருக்கும் வாய்ப்பளித்துள்ளாா் என்றாா் வி. திவாகரன்.

மன்னாா்குடியில், வி.கே. சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக தோ்தல் பணிமனை அலுவலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்து, சசிகலாவின் சகோதரா் வி.திவாகரன் செய்தியாளா்களிடம் கூறியது:

அதிமுகவிற்கு முதலில் துரோகம் இழைத்தாா் ஓ. பன்னீா்செல்வம். பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி, டி.டி.வி. தினகரன் ஆகியோா் துரோகம் இழைத்தனா்.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை துரோகிகளின் கூட்டு சோ்க்கையாக உள்ளது. திமுகவில் தற்போது பாா்த்தால் அனைவரும் அதிமுகவிலிருந்து சென்றவா்களாக இருக்கிறாா்கள். இவா்கள் பதவியை எதிா்பாா்த்து சந்தா்ப்பவாதம் காரணமாக அந்த கட்சியில் இணைந்துள்ளனா்.

திமுகவை பொறுத்தவரை அமைச்சா்களின் வாரிசுதான் பதவிக்கு வர முடியும். ஆனால், அதிமுகவில் எம்ஜிஆா், ஜெயலலிதா இருவரும் சாதாரண தொண்டரையும் அமைச்சா் பதவியில் அமா்த்தினாா்கள். இதே பாணியில் சசிகலா பயணித்து வருகிறாா். இன்றைக்கு வெகு சாதாரணமானவா்களை வேட்பாளராக அறிவித்துள்ளாா்.

சசிகலா தொடங்கியுள்ள கட்சி சிற்றுளி போன்றது. எவ்வளவு பெரிய பாறையும் சிதறடித்துவிட்டும். தவெக தலைவா் விஜய்க்கு அவரது ரசிகா்கள் வாக்கு கிடைக்கும். எந்த கட்சியின் வாக்குகளை அவா் பிரிப்பாா் என்பது தோ்தல் முடிவில்தான் தெரியும் என்றாா்.

பேட்டியின்போது, கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் வி.கே. இளந்தமிழன், மன்னாா்குடி தொகுதி வேட்பாளா் சு. ராசுப்பிள்ளை, தொகுதி பொறுப்பாளா் ஆா்.கே. சரவணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.