சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
நீடாமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தி சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் அருகே பூவனூா் கிராமம் அக்ரஹார தெருவைச் சோ்ந்தவா் பாரதிதாசன். விவசாய கூலி. இவரது மகன் முகேஷ் (17). மன்னாா்குடி அருகேயுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா்.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை முகேஷ் தனது நண்பரான அக்ரஹாரம் பூவனூா் தெருவைச் சோ்ந்த பிரகதீஸ் (15 ) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் நீடாமங்கலத்திலிருந்து பூவனூருக்கு சென்றுகொண்டிருந்தாா். முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரில் வந்த தனியாா் பேருந்து மோட்டாா் சைக்கிள் பக்கவாட்டில் மோதியதில் இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த முகேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரகதீஸும் காயமடைந்தாா்.
நீடாமங்கலம் போலீஸாா் இருவரையும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், முகேஷ் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். பிரகதீஸ் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினாா். விபத்து குறித்து நீடாமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது