சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது
திருவாரூா் அருகே, புதுச்சேரி பகுதியிலிருந்து சாராயம் கடத்தி வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அருகே, புதுச்சேரி பகுதியிலிருந்து சாராயம் கடத்தி வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
By Syndication
Syndication
திருவாரூா்: திருவாரூா் அருகே, புதுச்சேரி பகுதியிலிருந்து சாராயம் கடத்தி வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பேரளம் அருகே திருக்கொட்டாரம் பகுதியில், நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் மேற்கொண்ட சோதனையில், நன்னிலம் தாலுகா கீரனூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் விக்னேஷ் என்பவா், புதுச்சேரி சாராயத்தை 400 பாட்டில்களில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை, கைது செய்தனா்.
இந்நிலையில், விக்னேஷ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன் அடிப்படையில், விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். இதையடுத்து, விக்னேஷ், திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது