தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தீபாவளி: ஓய்வூதியா்கள் இலவச வேட்டி, சேலை பெறலாம்

திருவாரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி ஓய்வூதியா்கள் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் பயன் பெறலாம்.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 7:58 pm

Din

திருவாரூா்: திருவாரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி ஓய்வூதியா்கள் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் பயன் பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்மூலம் தீபாவளி பண்டிகைக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதியோா் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு, அவா்கள் வசிக்கும் இடத்தில் உள்ள பொது விநியோகக் கடைகள் மூலம் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். ஆதாா் எண்ணுடன் குடும்ப அட்டை எண் இணைக்கப் பெறாத பயனாளிகளுக்கு தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலா் மூலம் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் இலவச வேட்டி சேலைகள் பெற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.