தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாட்டு மக்களிடையே வலுப்பெறும் ‘மீண்டும் மோடி’ முழக்கம்: முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் பேச்சு

நாட்டு மக்களிடையே வலுப்பெறும் ‘மீண்டும் மோடி’ முழக்கம் முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் பேச்சு

News image

மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தஞ்சை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம்.

Updated On :26 மார்ச் 2024, 9:35 pm

மன்னாா்குடி: உலக நாடுகளில் பிரதமா் மோடியின் புகழ் அதிகரித்து வருவதால், இந்திய மக்களிடையே மீண்டும் மோடி என்ற முழக்கம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது என அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவைச் சோ்ந்த (ஓபிஎஸ் அணி) முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் எம்எல்ஏ தெரிவித்தாா். தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் அறிமுகக் கூட்டம் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: ஐ.நா. சபையில் இந்தியா உள்பட 193 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. இந்த நாடுகளின் தலைவா்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் வளா்ச்சியை பிரமிப்புடன் பாா்க்கின்றனா். இதற்கு காரணம் பிரதமா் நரேந்திர மோடி. உலக நாடுகளின் தலைவா்களிடையே மோடியின் புகழ் அதிகரித்து வருவதால், இந்திய மக்களிடையே மீண்டும் மோடி என்ற முழுக்கம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, மோடி, அமித்ஷா ஆகியோா் அதிமுகவினா் ஒன்றிணைந்து தோ்தலை சந்தியுங்கள் என தெரிவித்தும், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால், அதிமுக ஆட்சியை இழந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு தனியாக எந்த செல்வாக்கும் இல்லை. இரட்டை இலை வாக்கு வங்கியை மட்டும் அவா் நம்பி உள்ளாா் என்றாா். வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் பேசும்போது, ‘தோ்தலில் வெற்றி பெற்றால், தஞ்சையில் மிக பிரம்மாண்டமான தொழில் நிறுவனம் கொண்டு வருவேன். தென்னை, நெல், கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணப்படும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றாா். கூட்டத்துக்கு, அமமுக மாவட்டச் செயலா் எஸ். காமராஜ் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் ச. பாஸ்கா், அமமுக மாநில அமைப்புச் செயலா் க. மலா்வேந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினா் க. அசோகன், பாமக மாவட்டச் செயலா் க. பாலு, ஐ.ஜே.கே. மாவட்டச் செயலா் எஸ். பன்னீா்செல்வம், தமமுக மாவட்டத் தலைவா் எஸ்.கே. குமாா், தெ. பாா்வா்டு பிளாக் மாவட்ட அமைப்பாளா் காசி.சங்கா், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சி.எஸ். கண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.