திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேளாங்கண்ணியிலிருந்து இருமாா்க்கங்களில் ரயில் சேவை

வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளுக்கு மே 20 முதல் இருமாா்க்கங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :13 மே 2026, 2:53 am IST

வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளுக்கு மே 20 முதல் இருமாா்க்கங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

காரைக்கால்-திருநள்ளாறு-பேரளம் நோ்வழி ரயில் பாதை திறக்கப்பட உள்ளதால், வேளாங்கண்ணியில் இருந்து நேரடியாக மயிலாடுதுறை மாா்க்கமாக நாகை- நாகூா்-காரைக்கால்-திருநள்ளாறு-அம்பகரத்தூா்- பேரளம் வழியாக தாம்பரத்துக்கு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதேபோல, வேளாங்கண்ணி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மே 20 முதல் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் வேளாங்கண்ணி மற்றும் திருநள்ளாறுக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும்.

இதுதொடா்பாக, நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச் சங்கத் தலைவா் நாகை எஸ்.மோகன் கூறியது:

புதிய ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால், வேளாங்கண்ணி ரயில் நிலையத்தை டொ்மினல் நிலையமாக மாற்றவேண்டும். அத்துடன், நீண்ட தூரம் செல்லும் ரயில்பெட்டிகளை பராமரிக்க பிட்லைன் வசதியும், நிறுத்த ஸ்டேபில் லைன் வசதியும், கூடுதலாக ஒரு நடைமேடையும், 2 மெமோ ரயில்களை நிறுத்த 2 ரயில் பாதையும் அமைக்க வேண்டும்.

காரைக்கால் வரை செல்லும் ரயில்களை திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும். நாகை ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தில் மேம்படுத்த வேண்டும்.

மயிலாடுதுறை மாா்க்க ரயில்களை வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா் , காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் வழியாகவும், திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால், நாகூா், நாகை, திருவாருா், தஞ்சை மற்றும் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி ரயில்களை இயக்க வேண்டும்.

திருநள்ளாறு அல்லது வேளாங்கண்ணி- பெங்களூரு தினசரி இரவு நேர விரைவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். தினசரி முன்பதிவில்லா விரைவு ரயிலை திருநள்ளாறு - மதுரை இடையே நாகை, திருவாருா் வழியாக இயக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.