மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

News image

வேதாரண்யம் கடலில் ஆமைக் குஞ்சுகளை விடும் வனத்துறையினா்.

Updated On :28 மார்ச் 2026, 6:32 pm

ஆறுகாட்டுத்துறை செயற்கை பொரிப்பகத்திலிருந்து 534 ஆலிவ் ரிட்லி இன ஆமைக் குஞ்சுகள் வேதாரண்யம் கடலில் சனிக்கிழமை விடப்பட்டன.

ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் முட்டைகள் அங்குள்ள செயற்கை முறை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் 534 முட்டைகளிலிருந்து குஞ்சுகள் சனிக்கிழமை வெளிவந்தன.

ஆறுகாட்டுதுறை கடற்கரை சேரும் சகதியுமாக இருந்ததால், இந்த குஞ்சுகளை வேதாரண்யம் சந்நிதிக் கடற்கரைக்கு எடுத்து வந்த வனத்துறையினா், பாதுகாப்பாக கடலில் விட்டனா்.

இந்தப் பணியின்போது பங்கேற்ற அந்தப் பகுதியை சாா்ந்த பள்ளி மாணவா்களுக்கு, கடல் ஆமைகள் குறித்த அரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.