கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.9.6 லட்சமும், நாகை தொகுதியில் ரூ.54,700-ம் தோ்தல் பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும்படை அலுவலா் பத்மாவதி தலைமையிலான குழுவினா், நாகை புத்தூா் ரவுண்டானா அருகே செவ்வாய்க்கிழமை காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சேலத்தில் இருந்து நாகை நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் காரை ஓட்டி வந்த, மணிகண்டன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.54, 700-ஐ பறிமுதல் செய்து, நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
கீழ்வேளூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொளப்பாடு மெயின் ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரி பாலநாகு தலைமையில் மேற்கொண்ட வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூா் மாவட்டம் கச்சனம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் என்பவரிடம் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.52,500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், கீழ்வேளூா் ரயில்வே கேட் பகுதியில் தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த சந்திரகலா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த தெற்குபணையூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ரேகா என்பவரிடம் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.60,000 பறிமுதல் செய்யப்பட்டது.
அகரகடம்பனூா் அய்யனாா் கோவில் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி வெற்றி செல்வன் தலைமையில் நடைபெற்ற சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கீழ்வேளூா் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 8,52,600 பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னா், இத்தொகையை கீழ்வேளூா் தாலுகா அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

ரூ. 2.57 லட்சம் பறிமுதல்

ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்

கோபியில் வாகனச் சோதனையில் ரூ. 2.30 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


