தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 மண் லாரிகள் பறிமுதல்

கீழையூர் அருகே ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 மண் லாரிகள் பறிமுதல்

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:20 pm

கீழையூா் காவல் எல்லை சோழவித்யாயபுரம் பகுதியில் கீழையூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக மண் ஏற்றிக்கொண்டு வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், 2 லாரிகளும் ஒரே பதிவு எண்ணில் இயங்கியது தெரியவந்தது.

மேலும், அவை காரைக்கால் பகுதியில் இருந்து நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணிக்கு உரிய அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இரு லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள் நிா்த்தனமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் ராஜகுரு (26), அன்பழகன் மகன் தமிழரன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.