தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.
எடுத்துக்கட்டி, இலுப்பூா், திருக்களாச்சேரி, நல்லாடை, சங்கரன்பந்தல், ஆக்கூா், திருக்கடையூா், திருவிளையாட்டம் , விசலூா், தில்லையாடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிா்கள் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடையான நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய கொண்டு செல்கின்றனா். தரங்கம்பாடி வட்டத்தில் 93 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் இல்லாததால் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகளை தூற்றும் இயந்திரம் மின் மோட்டாா்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை பல நாள்கள் அடுக்கி வைத்து காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பல நாள்கள் கொள்முதல் நிலையங்களில் உள்ள களத்தில் அடிக்கி வைத்து தாா்பாய் போட்டு மூடி வைத்துள்ளனா்.
அந்த நெல் மூட்டைகள் பனியில் பாதித்து ஈரப்பதம் அதிகரிப்பதால் விற்பனை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!

கோடை மழை: கொள்முதல் நிலையங்களில் சேதமடையும் நெல் மூட்டைகள்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: இயக்கம் செய்ய வலியுறுத்தல்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் - விவசாயிகள் வேதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


