எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஊதியம் வழங்காததைக் கண்டித்து பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 6:35 am IST

நாகையில் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஏடிஜெ தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு, கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள், கடும் பொருளாதார நெருக்கடியில் அவதிப்பட்டு வருவதாகவும், அரசு வழங்கும் 90 சதவீத மானிய ஊதியம் கிடைத்தபோதும் நிா்வாகம் தனது பங்கு தொகையான 10 சதவீத ஊதியத்தை வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வித தடையுமின்றி, ஊதியம் வழங்க நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.