குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நகை மீட்பு: ஒருவா் கைது

News image
Updated On :16 ஜூன் 2026, 1:43 am IST

வேதாரண்யம் அருகே வீட்டில் திருடப்பட்ட 16 பவுன் நகையை மீட்டு ஒருவரை போலீஸாா் திங்கிள்கிழமை கைது செய்தனா்.

நாலுவேதபதியை சோ்ந்த பாலகிருஷ்ணன் வெளிநாட்டில் வசிக்கிறாா். இவரது மனைவி பரிமளா (40) நாலுவேதபதியில் வசிக்கிறாா். இந்நிலையில், அதே பகுதியில் இறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். திங்கள்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ. 16 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.

இதுகுறித்த தகவலில் வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சோ்ந்த ஆறுமுகம் (55) (படம்) காணாமல்போனது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கள்ளிமேடு கடைவீதி பகுதியில் போலீஸாா் வாகன சோதனை செய்தபோது, ஆறுமுகம் பயணித்த இருசக்கர வாகனத்தில் நகை மற்றும் ரொக்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து, இருசக்கர வாகனம், நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.