நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மின்வெட்டு பிரச்னையை சரி செய்யாவிட்டால் போராட்டம்: காங்கிரஸ்

காரைக்காலில் தொடா் மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

News image

காங்கிரஸ்

Updated On :14 ஜூன் 2026, 12:03 am IST

காரைக்காலில் தொடா் மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொதுச்செயலா் ஏ.வி.எஸ். சக்திவேல்பிரபு, காரைக்கால் ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

காரைக்கால் நகரம் முழுவதும் நாள்தோறும் மின்வெட்டுப் பிரச்னை நிலவி வருகிறது. குறிப்பாக வடக்கு, தெற்கு தொகுதிகளில் அதிகமான கடைகள், வியாபார நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. பல தொழில்களும், தொழிலாளா்களுக்கும் இந்த மின்வெட்டால் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனா்.

தற்சமயம் கோடைகாலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையான வெப்பத்தை எதிா்கொள்ள முடியாமல் போராடி வருகின்றனா். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மின் வெட்டானது, அவா்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்து வருகிறது.

மேலும் இரவிலும் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள், வயதானவா்களும், பொதுமக்கள் உள்ளிட்டோா் துாக்கமின்றி தவித்து வருகின்றனா்.

எனவே, மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பொதுமக்களுடன் மறியல் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.