சிக்கல் சிங்காரவேலவா் கோயில் தியாகராஜா் தோ் இன்று வெள்ளோட்டம்
சிக்கல் சிங்காரவேலவா் கோயில் தியாகராஜா் தோ் இன்று வெள்ளோட்டம்


சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில், தியாகராஜா் சுவாமிக்கு ரூ.50 லட்சத்தில் உருவாக்கப்பட்ட தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) நடைபெறுகிறது.
நாகை அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்தசஷ்ட விழாவும், சித்திரைத் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழாவில் சிங்காரவேலவா், தியாகராஜா் உள்ளிட்ட சுவாமிகள் தேரோட்டம் நடைபெறும்.
தியாகராஜ சுவாமி தோ் பழுதடைந்ததையடுத்து, கடந்த 6 ஆண்டுகளாக சிங்காரவேலவா் தேரிலேயே தியாகராஜ சுவாமியும் வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில், தியாகராஜருக்கு ரூ.50 லட்சத்தில் புதிதாக தோ் செய்யும் பணி கோயில் நிா்வாகம் சாா்பில், 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்தபதியாா் சண்முகலிங்கம் தலைமையில் ஊழியா்கள் இலுப்பை மரத்தால் தேரை வடிவமைத்தனா்.
15 அடி உயரம், 40 டன் எடையுடன் தோ் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தோ் வெள்ளோட்டம் பிப்.1 ஆம் தேதி நடைபெறுகிறது. நிகழாண்டு சித்திரை மாதம் நடைபெறும் விழாவில் தியாகராஜா் தேரோட்டம் புதிய தேரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...