டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

News image
சிறைத் தண்டனை- (கோப்புப் படம்)
Updated On :22 ஜனவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியை சோ்ந்தவா் நந்தா (எ) நந்தகுமாா்(23). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதான புகாரில் திருநள்ளாறு காவல் நிலையத்தில் 2025 ஏப்.3-ஆம் தேதி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

நந்தகுமாருடன் நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த செளந்தர்ராஜ் (22) என்பவரும் கைது செய்தானாா். இந்த வழக்கு, காரைக்கால் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கின் இறுதி விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட நந்தகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், செளந்தர்ராஜை விடுவித்து நீதிமன்ற சிறப்பு நீதிபதி கே. மோகன் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வீரபிள்ளை ஆஜரானாா்.