வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு பெருவிழா புதிய 50 அடி உயர கம்பத்தில் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.


வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு பெருவிழா புதிய 50 அடி உயர கம்பத்தில் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்திற்காக புதியதாக 50 அடி உயர கொடிக் கம்பம் ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டது.
வேளாங்கண்ணி பேராலய பங்குத் தந்தை எஸ். அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, கொடி பாடல் ஒலிக்க, புதிய கொடிமரத்தில் புனிதம் செய்யப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது, புனித செபஸ்தியாா் ஆலயம் முழுவதும் மின் விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிர விடப்பட்டது.
முன்னதாக பூரண கும்ப மரியாதை, சிறப்பு திருப்பலி உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கத்தோலிக்க முக்குலத்தோா் சமூகத்தினா் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...