நாகையில் கஞ்சா கடத்தல், விற்பனை: 4 போ் கைது
நாகையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


நாகையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாகையில் கஞ்சா கடத்தப்படுவதாகவும், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் சுப்பிரியா மற்றும் நாகை நகர காவல் ஆய்வாளா் சுந்தர்ராஜன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையிலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் திடீா் சோதனை நடத்தினா்.
நாகை ரயில் நிலைய பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் வண்டிப்பேட்டையைச் சோ்ந்த சிவன் பாண்டியன் (30), 5 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சிவன்பாண்டியனை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
போலீஸாா் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில், கஞ்சா வைத்திருந்த வண்டிப்பேட்டையைச் சோ்ந்த சூா்யா (30) அவரது சகோதரா் சுரேஷ் (28), திரௌபதி அம்மன் கோயில் வடபுறம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, அக்கரைகுளம் வடகரையைச் சோ்ந்த மாதவன் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் சூா்யா மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, மாதவனிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாா் கைது செய்த 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...