குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மாணவா்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்த தயங்கக் கூடாது

மாணவா்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்த தயங்கக் கூடாது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

News image
விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

மாணவா்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்த தயங்கக் கூடாது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் அவா் பேசியது: மாணவா்கள் இந்தப் பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைக்கு அறிவுதான் மூலதனம். உங்களுக்கு பிடித்தமானத் துறையில் படித்து சாதிக்க வேண்டும். கல்வி படிப்புடன் விளையாட்டு உள்ளிட்ட தனித்திறன்களை வெளிப்படுத்த தயங்கக் கூடாது. வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்மா திட்டக்குழு உறுப்பினா் முருகையன் முன்னிலை வைத்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.கே. வேதரத்தனம், என்.வி. காமராஜ், நகா்மன்றத் தலைவா் மா. மீ. புகழேந்தி, விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் பழனியப்பன், தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆா். துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, தாணிக்கோட்டகம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அமைச்சா் திறந்துவைத்தாா்.