/

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கோடியக்கரை வன உயிரின சரணாலத்தில் கணக்கெடுக்கும் பணி...

News image
கோடியக்கரை வன உயிரின சரணாலத்தில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு குழுவினர்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

வேதாரண்யம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (பிப். 15) காலை தொடங்கியது.

இந்தச் சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நில வாழ் வெளிநாடு, உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், சரணாலயப் பகுதியில் காணப்படும் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

முன்னதாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. கணக்கெடுக்கும் பணியில் குழுக்களாகப் பிரிந்துச் சென்று வனத்துறை அதிகாரிகளும் பயிற்சி அளிக்கப்பட்டவர்களும் ஈடுபட்டனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.