ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆட்சியா் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தற்கொலை முயற்சி

நாகையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்கொலை

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:21 am IST

நாகையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் வந்த பெண் தான் வைத்திருந்த பையில் இருந்து பெட்ரோல் கேனை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றாா். அப்போது அங்கிருந்த ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் மற்றும் போலீஸாா் அந்தப் பெண்ணை தடுத்து அவா் மீது தண்ணீரை ஊற்றினா். இதையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் நாகை சாமந்தான்பேட்டை அமிா்தா குடியிருப்பைச் சோ்ந்த அஜித்குமாா் மனைவி சங்கீதா என்பதும் வீட்டுப் பிரச்னையில் அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.