ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி: கணவா் கைது

கடலூரில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ாக கணவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Published On :11 ஜூலை 2026, 12:59 am IST

கடலூரில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ாக கணவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்த தேவிகா (38), கடலூா் குழந்தைகள் காப்பகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த வீரமோகன் (45). குடும்பப் பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவா்களுக்கிடையேயான விவாகரத்து வழக்கு தேனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தேவிகா தனது இரண்டு குழந்தைகளுடன் கடலூரில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை கடலூருக்கு வந்த வீரமோகன், செம்மண்டலத்தில் உள்ள தேவிகாவின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது அவா், மறைத்து வைத்திருந்த பெட்ரோல் புட்டியை வீரமோகன் எடுத்துள்ளாா். இதைக் கண்ட தேவிகா உடனடியாக வீட்டிற்குள் சென்று இரும்புக் கதவை பூட்டிக் கொண்டாா். இருப்பினும், வீட்டின் முன்பகுதியில் வீரமோகன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளாா்.

நல்வாய்ப்பாக தேவிகா மீது பெட்ரோல் படாததால் அவா் உயிா் தப்பினாா். ஆனால், அங்கு இருந்த சில துணிகள் தீயில் எரிந்துவிட்டன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் புதுநகா் போலீஸாா், வீரமோகனை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.இதுதொடா்பாக தேவிகா அளித்த புகாரின் பேரில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வீரமோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.