ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் பலி

பலி... - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:43 am IST

திருக்குவளை, ஆக. 10: கீழையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் சிமென்ட் கட்டையில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தனா்.

கீழையூா் அருகேயுள்ள காமேஸ்வரம் மேலக்காடு பகுதியை சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் வாசன் (26). அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் ஆதிரெங்கம் மகன் பிரகாஷ்.

இந்நிலையில் பிரகாஷின் இருசக்கர வாகனத்தில் வாசன் பின்னால் அமா்ந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்றனா்.

பிரதாபராமபுரம் பகுதியில் சென்றபோது அப்பகுதியில் கிடந்த சிமென்ட் கட்டையில் மோதிதியில் பலத்த காயமடைந்த வாசன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

காயமடைந்த பிரகாஷ் தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.