நாகூா் வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டுச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாகூா் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள், துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டுச் சென்றனா்.
இதேபோல், பல வாக்குச் சாவடிகளிலும் துண்டுப் பிரசுரங்களை வீசிச் சென்றனா். அந்த துண்டுப் பிரசுரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்போல் வடிவமைக்கப்பட்டு, அதில் காக்கா படம் மற்றும் காக்கா முன்னேற்றக் கழகம் என்று அச்சிடப்பட்டிருந்தது.
மேலும், துண்டுப் பிரசுரத்தில் கட்சிகளின் சின்னங்களுக்குப் பதிலாக மண்டை ஓடுகள் படம் பொறிக்கப்பட்டிருந்தன. அத்துடன், அரசியலை பற்றி பேசவேண்டாம், பணவிசயத்தை பற்றி பேச வேண்டாம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
தோ்தல் வாக்குப் பதிவை கேலி செய்யும் விதமாக இந்த துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தன. இதனை போலீஸாா் கைப்பற்றி, வீசி சென்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடியில் விடியோ எடுத்த தவெக நிா்வாகி மீது வழக்கு

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சங்கரன்கோவிலில் மின் சிக்கன துண்டுப் பிரசுரம் விநியோகம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


