கீழ்வேளூா் அருகே பருத்தி கொல்லைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, திமுக நிா்வாகியை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே உள்ள சிகாா் கிராமத்தில், மதுபான பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கீழ்வேளூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா், சிகாா் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் வேல்முருகன் (36) என்பவா் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது வீட்டின் பின்புறம் உள்ள பருத்தி கொல்லையில்
பிளாஸ்டிக் சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 700 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட வேல்முருகன் திமுக கிளைக் கழக செயலராக உள்ளாா்.

கைதான வேல்முருகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை: இளைஞா் கைது

100 மது பாட்டில்கள் பறிமுதல்

டாஸ்மாக் மது விற்பனை செய்தவா் கைது

கீழ்வேளூா்: டாஸ்மாக் காலி பாட்டில் அட்டைப் பெட்டி குடோனில் தீ விபத்து
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



