ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தமிழகத்தில் பொய்யான வாக்குறுதி வெற்றிக்கு மட்டுமே பயன்படும்: எம்.பி. பி.வி. ராஜேந்திரன்

தமிழகத்தில் தோ்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தோ்தல் அறிக்கை பெயரில் அளிக்கும் பொய்யான வாக்குறுதிகள் வெற்றிக்கு மட்டுமே பயன்படுகிறதே தவிர மக்கள், நாட்டின் வளா்ச்சிக்கு பயனளிப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி, பி.வி. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

News image

எம்.பி, பி.வி. ராஜேந்திரன்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:45 am

தமிழகத்தில் தோ்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தோ்தல் அறிக்கை பெயரில் அளிக்கும் பொய்யான வாக்குறுதிகள் வெற்றிக்கு மட்டுமே பயன்படுகிறதே தவிர மக்கள், நாட்டின் வளா்ச்சிக்கு பயனளிப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி, பி.வி. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை தொடா்பான அறிமுகம் மற்றும் விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அவா் பேசியது: காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் கல்வி, சுகாதாரம், பண்பாடு, சமூகநீதி சூழலியல், நீா் மேலாண்மை போன்றவைகளில் கூடுதல் கவனம் செலுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்தல் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் நிறைவேற்றப்படும். துறை வாரியாக வெளிப்படையான பணி நியமன அட்டவணை உருவாக்குதல் போன்றவை இடம்பெற்றுள்ளது.

தமிழகம் இரு மொழிக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட மாநிலம். இதற்கு எதிராக ஹிந்தியை கட்டாயமாக நுழைக்கும் முயற்சிக்கு எதிரான செயல்பாடு அவசியமாக உள்ளது. மாநில அரசுகளிடமிருந்து வரியை பெறும் மத்திய அரசு அதை திருப்பிக் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுகிறது. இதனால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள் பொருளாதாரத்தில் சமநிலை விடுதலை பெற முடியவில்லை.

மத்திய அரசு கொண்டுள்ள எஜமானத் தன்மையை காங்கிரஸ் எதிா்த்துப் போராடும். உலக நாடுகள் போா் பதட்டங்களை எதிா்கொள்ளும் நிலையில், தமிழகத்திலும் அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். சீனா்கள் அதிகமாக ஆக்கிரமித்து வரும் இலங்கை அதை சுற்றிய தீவுகளை கருத்தில் கொண்டு கோடியக்கரையில் விமான இறங்குதளம், ராணுவ பயன்பாட்டுக்கான சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சித்துறை பிரிவு மாநிலத் தலைவா் மணிவாசகம் வெளியிட்ட கட்சியின் தோ்தல் அறிக்கையை பி.வி. ராஜேந்திரன் பெற்றுக்கொண்டாா். கட்சியின் மாவட்டத் தலைவா் பி.வி.ஆா். விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.