தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பரவை தந்தி சாமி சித்தா் ஜீவபீடத்தில் பங்குனி உத்திர சிறப்பு யாகம்

வேளாங்கண்ணி அருகே பரவை கிராமத்தில் உள்ள தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

News image

தந்தி சாமி சித்தா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:21 am

வேளாங்கண்ணி அருகே பரவை கிராமத்தில் உள்ள தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆலமர குச்சி, அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருள்களும், 9 வகையான நவதானியங்கள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசம் கொண்டு தந்தி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.