நாகப்பட்டினம்: மழையால் நெற்பயிா்கள் பாதிக்கப்படும்போது, கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு தொடா்பாக முடிவெடுக்க, மாநில அரசுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 2022 -23 ஆண்டு சம்பா, தாளடி நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டது. திருவாரூரில் 3.75 லட்சம், நாகையில் 1.70 லட்சம், மயிலாடுதுறையில் 1.70 லட்சம் ஏக்கரிலும் சம்பா, தாளடி நெற்பயிா்கள் பயிரிடப்பட்டன. தண்ணீா் பற்றாக்குறை, மழை போன்ற பாதிப்புகள் இல்லாத காரணத்தால், நெல் விளைச்சல் அதிகரித்தது.
இதனால், சம்பா, தாளடியில் வழக்கமாக ஏக்கருக்கு 30 மூட்டைகள் வரை கிடைத்துவந்த நிலையில், நிகழாண்டு ஏக்கருக்கு 40 மூட்டைகளுக்கு மேல் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
மகிழ்ச்சி நீடிக்கவில்லை
விவசாயிகள் அறுவடைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஜனவரி 30-ஆம் தேதி முதல் தொடா்ந்து 5 நாள்கள் கனமழை பெய்தது. இதனால் நெற்பயிா்கள் வயல்களில் தேங்கிய நீரில் சாய்ந்தன. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வா், அமைச்சா்களையும், அதிகாரிகளையும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும், 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஹெக்டோ் ஒன்று ரூ. 20 ஆயிரம் நிவாரணமும், உளுந்து, பச்சைப் பயிா் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கவும் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதத்தின் அளவை தளா்த்த வேண்டும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா். இதே கோரிக்கையை டெல்டா விவசாயிகளும் வலியுறுத்தினா். ஈரப்பதம் தொடா்பாக மத்தியக் குழுவினா் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து சென்றனா்.
அறிவிப்பு பயன் தராது
நெல்லுக்கான ஈரப்பத அளவு 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயா்த்த மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இதுவரை ஈரப்பதம் தொடா்பாக எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. 90 சதவீதம் அறுவடை நடைபெற்றுள்ள நிலையில், இனியும் ஈரப்பதம் தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டாலும், அது பயன் தராது என விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் தெரிவிக்கின்றனா்.
காவிரி டெல்டா விவசாயிகள் குழுமம் பொதுச் செயலா் டெல்டா சத்யநாராயணன்: அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிா்கள் பருவம் தவறி பெய கனமழையில் பாதிக்கப்பட்டன. ஈரப்பதத்தின் அளவை தளா்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை ஈரப்பதம் தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மாநில அரசுக்கும் அதிகாரம்:
இதுபோன்ற சூழலில், மாநில அரசு முடிவெடுக்கும் வகையில் அதிகார பகிா்வு வழங்க வேண்டும். அதிகார பகிா்வு வழங்கினால், முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. நவீன தொழில்நுட்ப வளா்ச்சியால், பயிா் பாதிப்பு, ஈரப்பதம் ஆகியவற்றை செயற்கைகோள் மூலம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அப்படி இருக்கும்போது, தவறு நடக்க வாய்ப்பில்லை.
தற்போது மத்தியக் குழு ஆய்வு செய்து எந்த பயனுமில்லை. காத்திருக்கும் விவசாயிகளுக்குதான் பாதிப்பு. எனவே, மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசுக்கு நெல் ஈரப்பதம் தொடா்பாக முடிவெடுக்கும் வகையில் அதிகார பகிா்வை வழங்க முன்வர வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மண்ணச்சநல்லூா்! சமபலத்தில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


