மயிலாடுதுறை மாவட்டத்தில் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி, குடும்பப் பிரச்னையில் மனைவியை கொலை செய்த கணவா் ஆகிய 2 போ் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செம்பனாா்கோவில் மேலமுக்கூட்டு பகுதியில் செம்பனாா்கோவில் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான மேலப்பாதியை சோ்ந்த அம்மாயி (எ) பிரவீன்ராஜ் (24), கடந்த மே 30-ஆம் தேதி அரிவாளைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியபோது, பிடிக்க முயன்ற போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வாா்த்தைகளால் திட்டி, அரிவாளால் தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்ததால், அவா் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா். பிரவீன்ராஜ் மீது மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 குற்ற வழக்குகள் உள்ளன.
மயிலாடுதுறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கங்கணம்புத்தூரை சோ்ந்த ஆனந்தராஜ் (28) என்பவா் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மே 15-ஆம் தேதி மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தாா். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஆனந்தராஜ் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 3 குற்ற வழக்குகள் உள்ளன.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து நடந்து கொண்ட இருவா் மீதும் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவின்பேரில் பிரவீன்ராஜ், ஆனந்தராஜ் ஆகிய இருவரும் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தப்பியோடிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

மா்மமான முறையில் ரெளடி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
மாவட்டத்தில் 133 ரெளடிகளிடம் விசாரணை: 5 போ் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




